Monday, March 25, 2019

இஸ்ரோ கல்வி நிறுவனம் 'Admission' அறிவிப்பு

தொடர்புடைய படம்

இஸ்ரோ கல்வி நிறுவனத்தில், ஜூனில் மாணவர் சேர்க்கை துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது இவற்றில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பி.டெக்., படிப்பு நடத்தப்படுகிறது.இந்த படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும் வரும் கல்வி ஆண்டில், பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 22ல் துவங்கும் என, இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை, www.iist.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு


2019 ஆம் ஆண்டிற்கான ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தேர்வு: Indian Economic Service 
தேர்வு: Indian Statistical Service 

வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் 

தகுதி: Indian Economic Service பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பொருளியியல், அப்ளைடு எக்னாமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ், பிசினஸ் எகனாமிக்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

Indian Statistical Service பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கு துறைசார்ந்த பிரிவுகளான புள்ளியியல், கணித புள்ளிவிவரம், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் உள்ளிட்ட ஏதாவதொரு ஒரு பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.upsconline.nic.in/mainmenu2.php என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப பதிவு கட்டணம்: ரூ.200 எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய தேதி: 20.03.2019 

தேர்வு நடைபெறும் தேதி: 28.06.2019 

 விபரங்கள் அறிய https://www.upsconline.nic.in 


Sunday, March 24, 2019

ஐஆர்சிடிசியில் வேலை உடனே விண்ணப்பிக்கவும்!


அனைவராலும் ஐஆர்சிடிசி என அழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் சென்னை ஐஆர்சிடிசியில் காலியாக உள்ள 74 மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 74

பணியிடம்: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா

பணி: மேற்பார்வையாளர் (Supervisor (Hospitality))

சம்பளம்: மாதம் ரூ. 25,000 + இதர சலுகைகள்

தகுதி: Hospitality & Hotel Administration பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி அனுபவம்: 2 ஆண்டுகள் 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து அசல் சான்றுகள் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 முதல் 12.04.2019 வரை 

1. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition(Catering College), G.V.Raja Road, Kovalam, Thiruvanthapuram, Kerala - 695 527.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019

2. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. Near M.S.Building & SKSJTI Hostel, S.J.Polytechnic Campus, Bengaluru - 560 001.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 10.04.2019

3. நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
Institute of Hotel Management Catering Technology and Applied Nutrition. 4th Cross Street, C.I.T.Campus, Tharamani PO, Chennai - 600 113
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 12.04.2019

விபரங்கள் அறிய Click Here

Sunday, March 17, 2019

BHEL Trichy Recruitment 2019 (400 Apprentice Posts)

Bharat Heavy Electricals Limited க்கான பட முடிவு


Organization Name: Bharat Heavy Electricals Limited 
Job Category: Central Govt Apprentice Training 
Total No of Vacancies: 400
Job Location: Trichy 

Educational Qualification: ITI
Selection Procedure: 1. Merit List , 2. Certificate Verification

How to apply: 
Eligible candidates can apply online through the Official website www.bheltry.co.in from 30-03-2019 to 03-04-2019. Before applying, Candidates should ensure that they fulfill the eligibility criteria as per published in the online advertisement.

Important Dates :
Starting Date for Submission of Application
30-03-2019
Last date for Submission of Application
03-04-2019
Publication of Shortlisted Candidates List
03-04-2019
Expected Certificate Verification Period
04-04-2019
Tentative Joining Date
11-04-2019

Official Notification & Application Link:
BHEL Trichy Official Website Career Page
BHEL Trichy Official Notification PDF
Apprentice Registration Portal
BHEL Trichy Online Application Form

8 ஆம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் க்கான பட முடிவு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தின ஊதியம் அடிப்படையில் நிரப்பப்பட 5 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: ஓட்டுநர் - 05

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்டபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 09.03.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32க்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 இதனை பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி என்ற பெயருக்கு காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்டி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஓட்டுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் முதலில் இப்பல்கலைக்கழகத்தில் தின ஊதிய அடிப்படையில்(நாளொன்றுக்கு ரூ.264 வீதம்) பணியமர்த்தப்பட்டு, பணி மற்றும் நடத்தைகள் திருப்திகரமாக இருப்பின் பின்னர் அப்பணியாளர்கள் இப்பல்கலைக்கழகத்தில் ஓட்டுநர் பதவியில் அப்பதவிக்குரிய ஊதியக்கட்டு மற்றும் தரஊதியத்தில் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
பதிவாளர், 
பாரதிதாசன் பல்கலைக்கழகம், 
பல்கலைப்போரூர், 
திருச்சிராப்பள்ளி -620 024

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.03.2019

விவரங்கள் அறிய Click Here

தேசிய வீட்டு வசதி வங்கியில் உதவி மேலாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

தொடர்புடைய படம்

தேசிய வீட்டு வங்கியில் காலியாக உள்ள 15 உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி: Assistant Manager (Scale I)

தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CA, ICWAI,CS முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhb.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2019

விவரங்கள் அறிய Click Here


Saturday, March 9, 2019

தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை: சிவில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தொடர்புடைய படம்

புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை துறையில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 28

பணி: Deputy General Manager

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 62 வயதிற்குள் இருக்க வேண்டும்

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhidcl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 40 Parliament Street, New Delhi - 110 001

விவரங்கள் அறிய Click Here

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.03.2019

தேசிய உர நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலை


புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய உர நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Junior Engineering Assistant Grade II. (Production) 

காலியிடங்கள்: 53

சம்பளம்: மாதம் ரூ.9,000 - 16,400

தகுதி: இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 31.12.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.3.2019.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு விஜயா வங்கியில் வேலை


நாடு முழுவதும் உள்ள விஜயா வங்கியின் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 421 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 421

பணி: Peons & Sweepers

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்மந்த மாநிலங்களின் அலுவலக மொழிகளில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.150, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vijayabank.comஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்கள் அறிய Click Here

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.03.2019

உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

தொடர்புடைய படம்

திருச்சி மாவட்டம், துறையூர் டாப்செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டுத்திறன் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி மையத்திற்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உடற்கல்வி இயக்குநர் - 01
சம்பளம்: மாதம் ரூ. 10,000
தகுதி: இளங்கலை பட்டபடிப்புடன்ம் உடற்கல்வி பாடத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: உடற்கல்வி ஆசிரியர் - 02
சம்பளம்: மாதம் ரூ. 8,000 
தகுதி: உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு இளங்கலை பட்டம் மற்றும் உடற்கல்வியியல் பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வுக்குழுவால் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படும். பழங்குடியினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.03.2019

தமிழ்நாடு மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் கேங்க்மேன் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள அனைவரிடமிருந்து உடற்தகுதி தேர்விற்கும், எழுத்து தேர்விற்கும் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: கேங்க்மேன் (பயிற்சி)

காலியிடங்கள்: 5000

தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: இதர பிரிவினர், SC,ST ரூ.100, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.03.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 24.04.2019

விவரங்கள் அறிய Click Here




தமிழக காவல்துறையில் 969 காவல் உதவி ஆய்வாளர் வேலை


969 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுக்கு, மார்ச் 20-ஆம் தேதி முதல் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது.

தமிழக காவல்துறையில் காலியாக 969 (தாலுகா,ஆயுதப்படை,தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில் விரைவில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வு எழுத விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலமாக மட்டும் மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு சீருடை தேர்வு குழும அலுவலகம், அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் தேர்வு உதவி மையங்கள் இம் மாதம் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
இந்த உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 044-40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற செல்லிடப்பேசி எண்களையும் தொடர்புக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.


COMMON - RECRUITMENT 2019

(GR.II POLICE CONSTABLES, GR.II JAIL WARDERS, FIREMEN)


Saturday, March 2, 2019

வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019: UPSC வெளியீடு!

தொடர்புடைய படம்

இந்திய வனத்துறை அதிகாரி பணிக்கான தேர்வு - 2019க்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination - 2019

காலியிடங்கள்: 90

வயதுபவரம்பு: 01.08.2019 தேதியின்படி 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோருபவருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology அல்லது Agriculture, Forestry போன்ற ஏதாவதொன்றைமுதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதாவது முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 

முதல்நிலைத் தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, வேலூர் முதன்மைத் தேர்வு சென்னையில் வைத்து நடத்தப்படும். உத்தேசமாக டிசம்பர் 2019ல் நடத்தப்படலாம். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2019

விவரங்கள் அறிய click here

யுஜிசி-நெட் தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

யுஜிசி-நெட் க்கான பட முடிவு

தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் நடத்தப்படும் யுஜிசி-நெட் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி - பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கும் தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தகுதி பெற வேண்டும். இந்தத் தேர்வை இப்போது என்.டி.ஏ. நடத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டுக்கு ஜூன் மாதத் தேர்வு அறிவிப்பை என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. 

தேர்வு எப்போது?: இந்தத் தேர்வானது ஜூன் 20 முதல் 28 ஆம் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்பட உள்ளது. இதற்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை மே 15 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தத் தேர்வுக்கான முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.ntanet.nic.in, www.ugcnetonline.in ஆகிய இணையதளங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

கேந்திரிய வித்யாலயாவில் மாணவர் சேர்க்கை: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

கேந்திரிய வித்யாலயா க்கான பட முடிவு

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.

நாடு முழுவதும் 1,199 கேந்திரிய வித்யலயா பள்ளிகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 14 பள்ளிகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 48 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை, கே.வி.சங்கதன் என்ற, கேந்திரிய வித்யாலய ஆணையரகம் மூலமாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்தப் பள்ளிகளில், எல்.கே.ஜி, யு.கே.ஜி. போன்ற மழலையர் வகுப்புகள் கிடையாது. ஒன்றாம் வகுப்பில்தான், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்: 9-ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பிக்க வரும் மார்ச் 19-ஆம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கேந்திர வித்யாலய தலைமையகத்தின் kvsonlineadmission.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

பிற வகுப்புகளுக்கு... அதேபோன்று பிளஸ் 1 தவிர, இரண்டாம் வகுப்பு முதல் மற்ற வகுப்புகளுக்கு, ஏப்., 2-இல், ஆன்லைன் பதிவு தொடங்கும். இந்த வகுப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வரும் ஏப். 9 மாலை 4 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். பிளஸ் 1 சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் விண்ணப்பப் பதிவு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தேர்வு வாரிய க்கான பட முடிவு

கணினி பயிற்றுநர் நிலை- 1 (முதுநிலை ஆசிரியர் நிலை) பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்.10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிக்கை சார்ந்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.