Thursday, May 31, 2018

5 ஆண்டு சட்டப்படிப்பு: இன்று முதல் விண்ணப்பம்


ஐந்து ஆண்டு சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது.

தமிழ்நாடு, அம்பேத்கர் சட்ட பல்கலை கட்டுப்பாட்டில், 11 சட்டக் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஐந்தாண்டு ஹானர்ஸ் சட்டப்படிப்பில் சேருவதற்கான, விண்ணப்ப பதிவு, மே, 28ல் துவங்கியது.இந்நிலையில், ஐந்தாண்டு ஹானர்ஸ் அல்லாத சட்டப்படிப்புக்கான, விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது. இன்று முதல், 29ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தரலாம்.

இந்த ஆண்டு முதல், ஆன்லைனிலும் சட்டப் படிப்பு விண்ணப்ப பதிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் விருப்பம் இல்லாதவர்கள், சட்ட கல்லுாரிகளுக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தரலாம் என, அம்பேத்கர் சட்ட பல்கலை அறிவித்து உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வுக்கான வயது உச்சவரம்பை உயர்த்தியது தமிழக அரசு


குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்பை உயர்த்தி தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

குரூப் 1, 1ஏ, 1பி தேர்வு எழுதுவோருக்கான வயது உச்ச வரம்புகளை உயர்த்துவதாக தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, குரூப் 1 தேர்வு எழுதும் ஒதுக்கீடு பிரிவினரான எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35ல் இருந்து 37 ஆக உயர்த்தப்படுகிறது.

இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைத் தவிர்த்து இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு 30ல் இருந்து 32 ஆக உயர்த்தப்படுகிறது.

தமிழகத்தில் டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 

இதற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்பை ஏற்று முதல்வர் பழனிசாமி இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், கிராமப்புற மாணவர்கள் பலர் பயன்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


RRB MATERIALS TAMIL AND ENGLISH

Image result for RRB

BIOLOGY(உயிரியல் )

1.BIOLOGY-1 CLIK HERE

2.BIOLOGY-2 CLIK HERE

3.BIOLOGY-3 CLIK HERE

G.K(பொதுஅறிவு)

1. G.K-1 CLIK HERE

2. G.K-2 CLIK HERE

3. G.K-3 CLIK HERE

HISTORY

Tamil Nadu Government ITI Courses - Online Admission 2018 Notification

Related image



Online Application Starts - 28.05.2018

Last Date to fill the Online Application - 27.06.2018

Official website : clik here

TN skill training guide: clik here

NEET தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு!

Related image

MBBS,BDS படிப்புக்கான NEET தேர்வு முடிவுகள் ஜூன்5-ம் தேதி வெளியீடுஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது.மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் தேர்வை, இதற்கு விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26 ஆயிரத்து 775 மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர்.தமிழ், ஆங்கிலம், உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி www.cbseneet.nic.in இணையதளத்தில் வெளி யிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

Engineers India Limited Recruitment 2018

Image result for Engineers India Limited Recruitment 2018

Organization Name
Engineers India Limited
Website:
www.recruitment.eil.co.in
Job Location
All over India
Job Category
Central
No. of Posts
141 Vacancies
Name of the Posts
Engineer/Officer, Deputy Manager, DGM, Jr Accountantt & Other Posts

Qualification

Diploma, Bachelor Degree in Commerce, B.E / B.Tech / B.Sc.( Engg.)
Selection
Written Exam, Interview
Apply Mode:
Online
Starting Date
30.05.2018
Last Date
20.06.2018
Date of Examination
July/Aug 2018

EIL Online Application & Official Notification Links:
Website Page: Click Here
Notification: Click Here to Download
Application: Click Here to Apply

GRI Dindigul Computer Assistants Recruitment 2018

Image result for GRI Dindigul

Org Name
The Gandhigram Rural Institute
Website
www.ruraluniv.ac.in
Location
Dindigul
Category
Central
No. of Posts
06
Name of the Posts
Computer Assistants
Qualification
BCA, B.Sc (Computer Science), B.Sc (IT)
Selection
Short Listing, Interview
Apply Mode
Offline
Starting Date
30.05.2018
Last Date
09.06.2018, 05.00 p.m.

Notification: Click Here to Download

Aavin Trichy Recruitment 2018

Image result for Aavin Trichy Recruitment 2018

Org Name

Trichy District Cooperative Milk Producers Union LTD
Website
www.aavinmilk.com
Job Location
Trichy
Job Category
Tamilnadu Govt Jobs
No. of Posts
Various Posts
Name of the Posts
Marketing Executives
Qualification
MBA.,
Selection
Interview
Date of Interview
06.06.2018

Notification: Click Here to Download

இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் நாளையுடன் முடிகிறது

Image result for இன்ஜி., கவுன்சிலிங்

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்ப பதிவு, நாளையுடன் முடிகிறது. இதற்கு மேல் அவகாசம் இல்லை என்பதால், விரைந்து பதிவு செய்ய, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக அரசு நடத்தும், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். 2017 வரை, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கி, மே, 30ல் முடிவதாக அறிவிக்கப்பட்டது. துாத்துக்குடி கலவரத்தால், இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், தென் மாவட்ட மாணவர்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், கவுன்சிலிங் பதிவுக்கான அவகாசம், நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.நேற்று வரை, 1.39 லட்சம் பேர் பதிவு செய்துஉள்ளனர். நாளை நள்ளிரவு, 11:59 மணியுடன், ஆன்லைன் பதிவு முடிய உள்ளது. எனவே, இதுவரை பதிவு செய்யாதவர்கள் விரைந்து பதிவை முடித்து கொள்ளும்படி, அண்ணா பல்கலைஅறிவுறுத்தியுள்ளது.

பகுதி நேர பி.இ., நாளை கலந்தாய்வு

Image result for பகுதி நேர பி.இ., நாளை கலந்தாய்வு

கோவை, பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நாளை நடக்கிறது.

மாநிலத்தில், ஒன்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பகுதி நேர, பி.இ., -- பி.டெக்., படிப்புகளுக்கு, 1,465 இடங்கள் உள்ளன. இக்கலந்தாய்வுக்கு, 725 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிலையில், பங்கேற்கும் அனைவருக்கும், இடம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

நாளை காலை, 7:00 மணியளவில், ஜவுளி மற்றும் சிவில் பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு துவங்கவுள்ளது.கலந்தாய்வு செயலரான, கோவை, சி.ஐ.டி., கல்லுாரி முதல்வர் செல்லதுரை கூறியதாவது:பகுதி நேர கலந்தாய்வு, ஒரே நாளில் நடத்தி முடிக்கப்படும். தகுதியுடைய, 725 பேர் பங்கேற்க உள்ளனர்.காலை, 7:00 மணியளவில், ஜவுளி, சிவில் படிப்புகளுக்கும், 9:30 மணிக்கு மெக்கானிக்கல் பிரிவுக்கும், மதியம், 2:00 மணியளவில், இ.இ.இ., --- இ.சி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடக்கும். தரவரிசை பட்டியல் படி, குறிப்பிட்ட சமயத்தில், மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, May 30, 2018

ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு

Image result for jee

என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதல்நிலை) ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. புதன்கிழமை வெளியிட்டது.

என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக ஜே.இ.இ. முதல்நிலை (மெயின்) தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இதில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு ஜே.இ.இ. தாள்-1 தேர்வு நடத்தப்படும். பி.ஆர்க்., பி.பிளான் போன்ற கட்டடவியல் பொறியியல் படிப்புகளுக்கு ஜே.இ.இ. தாள்-2 தேர்வு நடத்தப்படும்.

இதில் ஜே.இ.இ. தாள்-1 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. பி.ஆர்க். படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

தேர்வு முடிவுகளை jeemain.nic.in , cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

இணையதளத்தில் புதிய பாடபுத்தகங்கள் இன்று வெளியீடு


தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் புதிய பாடபுத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகம் 31/05/2018  இன்று இணையத்தில் வெளியிட உள்ளது

இணைய முகவரி: 


பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

Image result for விடைத்தாள் நகல்

பிளஸ்–2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2–ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

2018–ம் ஆண்டு மார்ச் மாதம் பிளஸ்–2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள்களின் நகல்கோரி விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த(ஜூன்) மாதம் 2–ந் தேதி அன்று பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்தபிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரையிலான தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Image result for பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு

பிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், 8.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணை தேர்வு எழுதலாம். அவர்களுக்கு, ஜூலை, 5 முதல் சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


மதிப்பெண் பட்டியல் எப்போது: 

தேர்வு எழுதியவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். அரசு தேர்வுத்துறையால், அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே, இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும். 

மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரும், சான்றொப்பம் அளித்தால் மட்டுமே, மதிப்பெண் பட்டியல் செல்லும். எனவே, மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் பெற வேண்டும். 

மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்படி: 

பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், ஜூன், 1, 2 மற்றும், 4ம் தேதிகளில், பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடம் ஒன்றுக்கு, தலா, 550 ரூபாயும், முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் மறுமதிப்பீடு தேவை என்றால், அவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதை ஆய்வு செய்து, மறுமதிப்பீடு தேவை என்றால் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு தேவையா அல்லது மறுகூட்டல் தேவையா என்பதை முடிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல், மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Chennai Metro Rail Limited Recruitment for PG Diploma Course in Metro Rail Technology and Management

Image result for Chennai Metro Rail Limited

Org Name
Chennai Metro Rail Limited
Website
www.chennaimetrorail.org
Location
Chennai
Job Category
TN Govt
No. of Posts
25 Vacancies
Name of the Posts
PG Diploma Course Metro Rail Technology And Management
Qualification
BE/B.Tech
Selection
Written Exam
Apply Mode
Online
Starting Date
27.05.2018
Last Date
16.06.2018

CMRL Official Notification & Application:
Website Page: Click Here
Notification: Click Here
Application Form: Click Here

Tamil Nadu Public Service Commission Recruitment for Translation Officer Post

Related image

Organization Name
Tamil Nadu Public Service Commission
Website
www.tnpscexams.in
Location
Tamilnadu
Job Category
TN Govt
No. of Posts
16 Vacancies
Name of the Posts
Translation officer
Qualification
 Degree
Selection
Written Exam, Interview
Apply Mode
Online
Starting Date
30.05.2018
Last Date
29.06.2018

TNPSC Official Notification & Application:
Website Page: Click Here
Notification: Click Here
Application Form: Click Here

National Institute of Epidemiology Chennai Recruitment 2018

Image result for National Institute of Epidemiology

Organization Name
National Institute of Epidemiology
Official Website
www.nie.gov.in
Job Location
Tamil Nadu, Telangana on Contract Basis
Job Category
Central Govt Jobs
No. of Posts
46
Name of the Posts
DEO, LDC, Scientist


Qualification

10th, 12th, GNM, B.E/B.Tech, MBBS, M.Sc, Any Degree, Post Graduate
Selection
Written Exam, Interview
Date of Interview:
11 Jun 2018 to 28 Jun 2018

NIE Chennai Notification & Application Link: 
Notification: Click Here
Application Form: Click Here